இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா

Spread the love

திரையுலக பிதாமகன், பத்மஸ்ரீ டாக்டர்.கே.பாலசந்தர் பெயரில் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9 ம் தேதி ஒரு அறக்கட்டளையை அவருடைய சீடரூம், உலக நாயகனுமான பத்ம பூஷன் திரு.கமல்ஹாசன் அவர்கள் துவக்க இருக்கிறார்.

இயக்குநர் சிகரம் நடித்த ”உத்தம வில்லன்” திரைப்படம் அன்றைய தினம் காலையில் திரையிடப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்கள், வெள்ளித்திரை, சின்னத்திரை, நாடகம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.

மாலை 6 மணி அளவில் திரு.கே.பியைப் பற்றி கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதி, திரு.ரமேஷ் விநாயகம் அவர்கள் இசையமைத்த பிரத்யேகப் பாடல் ஒன்று வெளியிடப்படுகிறது.அதனைத் தொடர்ந்து, கே.பாலசந்தர் அறக்கட்டளையினை திரு.கமல்ஹாசன் அவர்கள் துவக்கவிருக்கிறார்.
அறக்கட்டளையின் சார்பாக, திரு. கே.பாலசந்தர் அவர்கள் சாதனைகள் புரிந்த நாடகம், வெள்ளித்திரை, சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு நடிகர், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் மற்றும் திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

இயக்குநர் திரு.எஸ்பி.முத்துராமன் அவர்கள் தலைமையிலான நடுவர் குழு கீழ்க்கண்ட கலைஞர்களை தேர்வு செய்துள்ளனர்.

கே.பாலசந்தர் நாடக விருது – மூத்த கலைஞர் திரு.காத்தாடி ராமமூர்த்தி
கே.பாலசந்தர் திரை விருது – திரு.மணிகண்டன் இயக்குநர் ”காக்கா முட்டை”
கே.பாலசந்தர் சின்னத்திரை விருது – திரு.திருமுருகன் இயக்குநர் & தயாரிப்பாளர்
பாலகைலாசம் சின்னத்திரை விருது – திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர்

இவ்விழாவில் நடிக நடிகையர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நாடகத்துறை, ,சின்னத்திரை, வெள்ளித்திரை உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இவ்விழா சென்னை, ராஜா அண்ணாமலை புரம் (Opp.எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி), முத்தமிழ்ப் பேரவை – திருவாவடுதுறை T.N.ராஜரத்தினம் கலையரங்கில் நடக்கவிருக்கிறது.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.