கலா தியேட்டர்ஸ் வழங்கும் கண்ணன் ராஜமாணிக்கம் தயாரித்து இயக்கும் “சூது வாது”

Spread the love

Soothu Vaathu Movie Working Stills (4)20 வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் விவேக்கை இதுவரை பார்த்திராத புதிய பரிமாணத்தில் நான் தான் பாலா படம் முலமாக நமக்கு அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம் இப்பொழுது எதார்த்த வாழ்வியலை “சூது வாது” மூலம் நமக்கு அளிக்கவிருக்கிறார்.

சந்தோஷ் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த சுனு லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கின்றார்.

படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் “நண்டு” ஜெகன் நடித்திருக்கிறார். கோவை சரளா, செண்ட்ராயன், டி.பி.கஜேந்திரன், ஆர்.வி.உதயகுமார், “நான் கடவுள்” ராஜேந்திரன், ரூபா ஸ்ரீ நாயர், ஜெரால்டு, என். இளங்கோ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நகைச்சுவைக்கு பெரும்பங்கு கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் உருக்கும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் இயக்குனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

கதை, திரைக்கதை, இயக்கம் – கண்ணன் ராஜமாணிக்கம்
வசனம் – “ஆச்சார்யா” ரவி
ஒளிப்பதிவு – எம்.ஏ.ராஜதுரை
கலை – வைரபாலன்
இசை – சந்திரஜித்
பாடல்கள் – தனிக்கொடி
படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா
இணை இயக்குனர் – பாரி
இணை தயாரிப்பாளர் – என் இளங்கோ
சண்டைபயிற்சி – ஆக்சன் பிரகாஷ்
நடனம் – கிஷோர்
மக்கள் தொடர்பு – நிகில்

அம்பா சமுத்திரம், குற்றாலம், திருநெல்வேலி, சுந்தரபாண்டிபுரம், குற்றாலம் போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெற்றுள்ளது. கேரளாவில் உள்ள கும்பா உருட்டி அருவியும், அம்பா சமுத்திரத்தில் உருவாக்கப்பட்ட காவல் நிலையமும் படம் முழுவதும் வருவதால் இந்த இரு இடங்களும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.