”தகவல்” சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததும் காரணம்

Spread the love

சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததும் காரணம் என்று ஒரு சினிமாவிழாவில்ஏ.எல்.எஸ்.புரொடக்வுன்ஸ்  தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன்    பேசினார் .இது பற்றிய விவரம் வருமாறு:

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு சூழலில் கிடைக்கும் தகவல் அவனது வாழ்க்கையையே மாற்றியமைக்கும். அதை மையப்படுத்திய கதைதான் ‘தகவல் என்கிற படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை கே.சசீந்தரா இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் பரதன்,ஜோஷி போன்ற பல இயக்குநர்களிடம் பணிபுரிந்து இருக்கிறார் .மோஷன் கிராப்ட் புரொடக்ஷன் மற்றும் எப்விஎம்எஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
‘தகவல்’ படத்தின் இசை வெளியீட்டுவிழா  நடந்தது .சுவாமி சச்சிதானந்தமாயி பாடல்களை வெளியிட்டார். உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணகி, ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ் ஜெயந்திகண்ணப்பன், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் ஏ.எல்.எஸ்.புரொடக்க்ஷன்ஸ் ஜெயந்திகண்ணப்பன்  பேசும் போது
” நாங்கள் 60 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறோம். நான்கு முதல்வர்களுக்கு ஊதியம் கொடுத்த நிறுவனம் எங்களுடையது. கலைஞருக்கு ‘பணம்’, எம்.ஜி.ஆருக்கு’ திருடாதே’ ,புரட்சித்தலைவி அம்மாவுக்கு ‘கந்தன் கருணை’, என்டி. ராமராவுக்கு ‘ராமாயணம்’ எங்கள் தயாரிப்பில் எடுத்தோம்.

இப்போது  படங்களில் பெண்களை மதிப்பது இல்லை. நாங்கள் பெண்களை மதித்து பெருமை சேர்க்கும் வகையில் ‘சக்கரவர்த்தி திருமகள்’. ‘சாரதா’, ‘ஆனந்தி’, ‘சாந்தி’ போன்ற படங்களை எடுத்தோம்.

என் மாமனார் ஏ.எல். சீனிவாசன் பீம்சிங், மாதவன் போன்ற எவ்வளவோ பெரிய இயக்குநர்களை அறிமுகப் படுத்தினார்
இன்று தென்னிந்தியப் படங்கள்தொழில் நுட்பத்தில் வட இந்தியப் படங்களுக்கே  சவால் விடுகின்றன.,ஹாலிவுட் சவால் விடுகின்றன.  ஆனால் நல்ல படங்கள் எடுக்கப் படுகிறதா என்றால்  நல்ல படங்கள் எடுக்கப் படுவதில்லை.

சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததும் காரணம் .இன்று பெண்கள் நடந்து கொள்வது மாற வேண்டும் பெண்களுக்கு அறிவும் வேண்டும். அடக்கமும் வேண்டும். இந்தச் சூழலில் பெண்களைப்பற்றி அவர்களின் பிரச்சினையை மையப் படுத்தி எடுக்கப் பட்டுள்ள ‘தகவல்’ படம் பற்றி பெற வேண்டும் ” இவ்வாறு ஜெயந்திகண்ணப்பன் பேசினார்.

இவ்விழாவில் மூன்னாள் நீதிபதி கண்ணகி, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி,மலையாள இயக்குநர் சந்திரமோகன், எழுத்தாளர் கோபால கிருஷ்ணன், சமூக ஆர்வலர் எம்.பி.சீனிவாசன், .படத்தின் இயக்குநர், கே.சசீந்திரா,,ஒளிப்பதிவாளர் ஜித்து ஜோஸ், நடிகை ரிஷா ,இசையமைப்பாளர் சாஜித்தென்றல்,நடன இயக்குநர் கூல்  ஜெயந்த் ,தயாரிப்பாளர் ஒய். அசோக் குமார்ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.