சென்னையில் ஆன்வீயின் புதிய கிளை தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி திறந்து வைத்தார்

Spread the love

குஜராத், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் உலகளவில் தரம் வாய்ந்த காது கேட்பு கருவிகளை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள ஆன்வீ நிறுவனத்தின் புதிய கிளை இன்று சென்னையில் திறக்கப்பட்டது. இதனை திரைப்பட தயாரிப்பாளரும், ஆரோக்கியம் குறித்து பல மேடைகளில் உரையாற்றி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவருமான திரு ஜி கே ரெட்டி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஆன்வீயின் உரிமையாளரான மெகுல் வி சங்வி பேசுகையில்,‘ தற்போதைய சூழலில் சுற்றுப்புற சூழல் கேடு மற்றும் ஒலி மாசு காரணமாக மக்களின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.  முதுமையின் காரணமாக கண் பார்வை பாதிக்கப்படுவது போல், செவித்திறனும் பாதிக்கப்படுகிறது.  ஆனால் இது குறித்த விழிப்புணர்வை மக்கள் இன்னும் போதிய அளவிற்கு பெறவில்லை. செவித்திறன் பாதிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இந்த குறைப்பாட்டை களைவதற்காக காது கேட்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் உதவியுடன் ஏராளமானவர்கள் தெளிவான, துல்லியமான ஒலிகளை கேட்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் இத்தகைய கருவிகளின் தேவை அதிகரித்து வருகிறது. அதனை மனதில் கொண்டு ஆன்வீ குழுமம் இந்தியா முழுவதும் கிளைகளை நிறுவி மக்களின் செவித்திறனை மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில் இது எங்கள் குழுமத்தின் 27 ஆவது கிளையாகவும், தமிழகத்தில் மூன்றாவது கிளையாகவும் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு உலகளவில் தரமான காது கேட்பு கருவிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களின் உதவியுடனும், ஆடியோலாஜிஸ்ட்டுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ஒருவருக்கு தரமான காது கேட்பு கருவிகள் நியாயமான கட்டணத்தில் வழங்குகிறோம். அத்துடன் காது கேட்பு கருவிகளுக்கான அனைத்து சேவைகளையும் செய்து வருகிறோம்.’ என்றார்.

இந்த கிளையைத் திறந்து வைத்த தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி பேசுகையில்,‘ இன்றைக்கு ஏராளமானவர்கள் ஹேண்ட்ஸ் ப்ரீயின் உதவியுடன் மொபைலில் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பேசவில்லை என்றால் பாட்டுக் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இதனால் அவர்களின் கேட்கும் திறன் குறைய வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு கேட்கும் திறன் குறைந்துவிட்டாலோ அல்லது அதிக சப்தத்துடன் பேசத் தொடங்கினாலோ உங்களின் செவித்திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து, டாக்டர்களிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அவர்கள் சொல்லும் காது கேட்பு கருவிகளை ஆன்வீக்கு வருகைத்தந்து இவர்களுடன் ஆலோசித்து பொருத்திக் கொள்ளுங்கள்.’ என்றார்.

திறப்பு விழாவில் ஆன்வீ குழுமத்தின் உறுப்பினர்களும், மருத்துவர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.