“ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பை சில திரையுலக சகோதர சகோதரிகள் ஆதரித்துப் பேசி வருவது மனவேதனை தருவதாக இருக்கிறது” நடிகர் கரிகாலன்

Spread the love

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான இந்த கடினமான தீர்ப்பை சில திரையுலக சகோதர சகோதரிகள் ஆதரித்துப் பேசி வருவது மனவேதனை தருவதாக இருக்கிறது. வளரும் இளம் தலைமுறைக்கு நாம் முன் உதாரணமாக திகழ வெண்டும் என விழைகின்றேன். பின் தற்போதைய கணக்கீட்டில் இந்த ஒப்புததலுக்கும் ஓரிரு விழுக்காடாய் இருக்கும். இந்த இயற்கைக்கும், இறைபடைப்புக்கும் மாறான சேர்க்கை பத்து விழுக்காடாய், ஏன் நூறு விழுக்காடாய் மாறக்கூடிய பரிதாப சூழல் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒருபால் உறவு தவறு, எச்ஐவியும்ம் பிற பாலின நோய்களையும் வரவிக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டதே, ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, எச்ஐவி பயந்துவிடுமா ?.

சுதந்திரம்….சுதந்திரம்… சுதந்திரம்… எது சுதந்திரம் ?, பயணத்தில் சிகப்பு விளக்கு எரிந்த பின்னரும் பயணிப்பது சுதந்திரமா ? நெரிசலோ, வித்தோ ஏற்படாதா ?, இயற்கைக்கு மாறான உறவுப் பயணம் மன நெருக்கடியையோ, மரணத்துக்கு ஏதுவானவற்றையோ நிகழ்த்திவிடாதா, சிந்திப்போம்…சீர்படுத்துவோம்

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.