அனைத்துவிதமான சினிமா பணிகளை மேற்கொள்ளும் ‘ஏஞ்சலா ஸ்டுடியோஸ்’ – ’கபாலி’ பட இயக்குநர் ரஞ்சித் தொடங்கி வைத்தார்

Spread the love

Angela StudiosA டூ  Z சினிமா பணிகளுக்கான ஒரே இடம் ‘ஏஞ்சலா ஸ்டுடியோஸ்’ (Angela Studios) – ’கபாலி’ பட இயக்குநர் ரஞ்சித் தொடங்கி வைத்தார்

திரைப்படம், விளம்பரப் படங்கள், குறும்படம், இசை ஆல்பம் ஆகியவற்றிற்கான எடிட்டிங், டப்பிங், இசை ரெக்கார்டிங், கலர் கரெக்‌ஷன், விளம்பர டிசைன் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டுமானால், ஒவ்வொரு துறையைச் சார்ந்த இடத்தையும்
தேடிப் பிடிப்பது மிக சிரமம். இந்த அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் இல்லாததால், ஒவ்வொரு பணிக்காக, ஒவ்வொரு இடத்திற்கு செல்வதால் காலதாமதமும் ஆகிறது. தற்போது இந்த குறையை போக்கும் விதத்தில், அனைத்து பணிகளையும் ஒரே
இடத்தில் கொண்டுவந்துள்ளது ‘ஏஞ்சலா ஸ்டுடியோஸ்’.

எடிட்டிங், ரெக்கார்டிங், மாடலிங் ஸ்டுடியோ, விளம்பர டிசைன், கலர் கரெக்‌ஷன், தொழில்நுட்ப கருவிகள் வாடகை என அனைத்துவிதமான பணிகளையும் ஒரெ இடத்தில் கொண்டுவந்துள்ள ‘ஏஞ்சலா ஸ்டுடியோஸ்’, சென்னை விருகம்பாக்கத்தில்
உள்ள ஆழ்வார் திருநகரில் திறக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த ஸ்டுடியோ திறப்பு விழாவில், ’கபாலி’ பட இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு திறந்து வைத்தார். இசையமைப்பாளர் கே, நடிகர் படவா கோபி ஆகியோரும் கலந்துக்கொண்டார்கள்.

சினிமாவில் குறும்படங்களுக்கு கிடைத்த வரவேற்பால் பலரும் ஆர்வமுடன் குறும்படம்  எடுக்க தொடங்கியிருக்கிறார்கள். அப்படி ஆர்வமுடன் தாங்கள் நினைத்ததை திரைக்கதை அமைத்தாலும், அதை திரையில் கொண்டு வருவதற்கான, தொழில்நுட்பங்கள் இல்லாமல் பலர் தடுமாறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரஷாதமாக அமைந்திருக்கிறது இந்த ‘ஏஞ்சலினா ஸ்டுடியோஸ்’. அதாவது, குறும்படம் எடுக்க நினைப்பவர்கள் கதையுடன் வந்தால் போதும், அப்படத்திற்கான ஒளிப்பதிவு சாதனங்கள்,
படமாக்கப்பட்ட பிறகு அப்படத்தின் எடிட்டிங், கலர் கரெக்‌ஷன், டப்பிங் ஆகிய பணிகளை மேற்கொள்வதுடன், அந்த படத்திற்கான போட்டோ ஷூட் எடுத்து, விளம்பர டிசைன் செய்வது வரை அனைத்து பணிகளும் ‘ஏஞ்சலா ஸ்டுடியோஸ்’ வில் மேற்கொள்ளப்படுகிறது. அதுவும் உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில்.

இதேபோல, விளம்பரப் படங்களுக்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் இங்கு, ‘ஜாமிங்’ (Jamming) வசதியும் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் இசை குழு வைத்துக்கொண்டு, பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, இசை ஆல்பம் தயாரிப்பது என்று இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு போதிய இசை கருவிகளும், ரெக்கார்டிங் தொழில்நுட்பங்களும் மற்றும் இசை பயிற்சி செய்யும் இடமும் இல்லாமல் இருப்பவர்களுக்காக அமைக்கப்பட்டது தான் இந்த ‘ஜாமிங்’. (Jamming). இதில்
இசை குழுவினருக்கு தேவையான அனைத்து இசை கருவிகளும், இசை தொழில்நுட்பங்களுடன் கூடிய, இசை பயிற்சி மேற்கொள்ளும் இடமும் உள்ளது.

லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய எடிட்டிங் ஸூட் அமைக்கப்பட்டுள்ள இங்கு, அதிக இட வசதிக்கொண்ட மாடலிங் ஸ்டுடியோவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டில் கேமரா, வீடியோ கேமிரா மற்றும் படப்பிடிப்புக்கான தொழில்நுட்ப கருவிகள் அனைத்தும் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கும் இங்கு எடுத்துக்கொள்ளலாம்.

இப்படி அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள ‘ஏஞ்சலா ஸ்டுடியோஸ்’ வில் 24 மணி நேர பவர் பேக் வசதியும் உள்ளது. அதனால் பவர் கட் ஏற்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை.

லயோலா கல்லூரியில் விஸ்சுவல் கம்யூனிகேஷன் படித்து, பிரபல சேனலில் பணியாற்றிய ராய் நவீன் மற்றும் சதிஷ் தேவராஜ் ஆகியோர் நிறுவியுள்ள ‘ஏஞ்சலா ஸ்டுடியோஸ்’ வில், ’கண்ணப்பர்’ உள்ளிட்ட ப ல குறும்படங்கள், விழிப்புணர்வு படங்கள், கல்லூரி மற்றும் பொருட்களின் விளம்பரப் படங்கள், டாடா குளுகோஸ் பிளஸ் குளிர்பானத்தின் விளம்பரப் படத்தின் மேக்கிங் ஆகியவற்றின் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து மேலும் பல புரொஜக்ட்டுகளுடன் பரபரப்பாக இயங்கி வரும் இந்த ஸ்டுடியோ பல திறமை வாய்ந்த இளைஞர்களின் பங்களிப்பில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஏஞ்சலா ஸ்டுடியோஸ்’ (Angela Studios)  குறித்து மேலும் கூடுதல் தகவல் அறிய,

எண்.112, ஆற்காடு சாலை,  ஆழ்வார்திருநகர், சென்னை-600087 ஆகிய
விலாசத்திலும், 7502525593 ஆகிய கைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம். e-mail
: roynaveen93@gmail.com, web : www.theangelastudio.com.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.