“அருவா சண்ட“ படத்தில்  கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்

Spread the love

சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கி வரும்  “  அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.  தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய “ ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக…“  என்ற பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது. 

கதாநாயகியின் அறிமுகப் பாடலான இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன், இயக்குநர் கொடுத்த  உடைகளை அணிய முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.
 
இந்தப் பாடலில் கொஞ்சம் கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்று ஏற்கனவே  சொல்லியிருக்கிறேன் அப்புறம்  என்ன என்று இயக்குநர் ஆதி கேட்க  நீங்க சொன்னதை விட எடுத்த டிரஸ் ரொம்ப சிறியதாக இருக்கிறது.  இதுவரை இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை  என்று  மாளவிகா பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் சுமார் ஒருமணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.  நடன இயக்குநர் ராதிகாவும் மாளவிகாவுக்கு புரியவைக்க முயற்சி செய்தார். கடைசியில் வேறு சில உடைகளை வெட்டி தைத்துக் கொடுத்தார் இயக்குநர். பின்னர்  ஓரளவு சமாதானம் அடைந்த மாளவிகா, கொட்டும் அருவியில் நனைந்தபடி  நடனக் குழுவினருடன் செமத்தியாக ஆட்டம் போட்டார்.  ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் ஏ.ராஜா தயாரித்து வரும் அருவா சண்ட  திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.