சமூக வலைத்தளத்தில் வைரலாகி 1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் ஐயங்கரன் டீசர்

Spread the love

காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐயங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். வெளியான சில நேரங்களில் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டீசரை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர்.

தற்போது இந்த டீசரை 1மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். குறிப்பாக இந்த டீசரில் இடம் பெறும் ‘ஓடாத விழுந்துடுவனு சொல்லுறதுக்கு இங்கு ஆயிரம் பேர் இருக்காங்க, ஆனா விழுந்துடாம ஓடுன்னு சொல்லுறதுக்கு இங்கு யாருமே இல்ல…’ என்ற வசனம் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

இந்த டீசர் வெளியான பிறகு படம் பற்றிய ஆர்வத்தை அதிகம் ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படத்தின் பாடல்கள், டிரைலர்கள், படம் வெளியாகும் தேதி ஆகியவற்றை வெளியிட இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவிஅரசு,
ஔிப்பதிவு- சரவணன் அபிமன்யு,
இசை- ஜி.வி.பிரகாஷ்குமார்,
எடிட்டிங்-A.M.ராஜா முகமது,
கலை-G.துரைராஜ்
பாடல்கள்- ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக்,
நடனம்-ராஜு சுந்தரம், ஷோபி
ஆக்ஷன்-ராஜசேகர்

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.