கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’

Spread the love

கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ நிறுவனமும், சர்வதேச தரத்தில் நல்ல கதைகளங்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், ஆசியாவில் விநியோகித்தும் வரும் ‘கைபா பிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து, ஒரு யதார்த்தமான அழுத்தமான காதல் கதையை மிக நளினமானப் படைத்திருக்கின்றனர்.

முழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியனான கோர்ட்னி, தன்னுடைய நண்பரின் உறைந்த குளத்தில், ஸ்கேட்டிங் பயிற்சியாளராக தனது பணியை துவக்குகிறார். கூடுதல் மாணவர்களை ஈர்க்கும் விதத்தில், ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஒன்றை வடிவமைத்து, தனது மருமகளுடன் விநியோகித்து வருகிறார். இந்நிலையில் அவரது பள்ளிப்பருவ காதலன் ஆரன் நோபிள் தனது மருமகளை ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்ப்பதற்காக கோர்ட்னியை சந்திக்கிறார். காரணம் சொல்லாமல் பிரிந்து சென்ற பள்ளிப்பருவ காதலன் ஆரன், அதன் பாதிப்புகளில் இருந்து போராடி மீண்டு, வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டிருக்கும் கோர்ட்னி, பல ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பு, அதன் தாக்கம் என்ன, அவர்கள் வாழ்வில் நடந்ததென்ன, காதலர்கள் இணைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.

உணர்வுகளின் கொந்தளிப்பில் இருக்கும் பள்ளிப்பருவ காதலுக்கும், வாழ்வின் யதார்த்தங்களும், நிதர்சனங்களும் புரிந்த நிலையில் அதனை அணுகும் போதும் உள்ள வித்தியாசத்தையும் மிகவும் நளினமாகவும், சுவராஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டானியல்.

இப்படத்தில் கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோருடன் இணைந்து, ஏஜண்ட் குமார் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு டாம் ரோட்ஸ், ட்ரூ ஜாகப்ஸ் ஆகியோரின் உன்னதமான பங்களிப்புடன் சியன் ஆண்டனி கிஷ் இசையமைத்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் மிச்சிகன் மாகாணத்தின் எழில் கொஞ்சும் ஏரிகள், பச்சை புல்வெளிகள், டெட்ராய்ட் நகரின் நவீன தொழில்துறை மையங்கள், தனித்துவமான நான்கு பருவநிலைகள் என மிகவும் பிரமிப்புடன் ரசிக்கதக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.

கிறிஸ்டல் கிரீக் மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், விரைவில் ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
கோர்ட்னி மாத்யூஸ்
ஆரன் நோபிள்
‘மாவீரன்’ நெப்போலியன்
ஷீனா மோனின்
ராபர்ட் லெனன்
மற்றும் பலர்.
தயாரிப்பு: கிறிஸ்டல் கிரீக் மற்றும் கைபா பிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள்:
நிர்வாக தயாரிப்பாளர்கள்: மார்க் நட்சன், மிஷல் நட்சன், டெல். கே கணேசன், ஜி பி டிமொதியோஸ்
சவுண்ட் டிசைன்- தாமஸ் லேஷ்
இசை- சீன் ஆண்டனி கிஸ்க்
ஒளிப்பதிவு, எடிட்டிங் & இயக்குனர்: டானியல் நட்சன்

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.