டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக வெள்ள நிவாரண உதவி வழங்கப்பட்டது

Spread the love
வட கிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலைகழகத்தின் நிறுவனர் திரு. A.C. சண்முகம் அவர்கள், பல்கலைகழகத்தின் தலைவர் Er. A.C.S. அருண்குமார் மற்றும் செயலாளர் திரு. A.ரவிகுமார் ஆகியோர்  பல்கலைகழகத்தின் அருகே உள்ள மதுரவாயல் மற்றும் அடையாளம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். சுமார் 1000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரிசி பைகள், உணவு பொட்டலங்கள் மற்றும் வேஷ்டி சேலைகள் இலவசமாக வழங்கினார்கள்.
உடன் பல்கலைகழக பதிவாளர், இணை பதிவாளர், டீன்கள் மற்றும் பேராசிரியர்களும் பங்கு பெற்றனர்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.