இங்கிலிஷ் படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ராம்கி பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பினார்

Spread the love

PAS_2297R.J Media creation சார்பில் R.J.M. Vasuki தயாரித்து குமரேஷ் குமார் இயக்கத்தில் நடிகர் ராம்கி, ‘குளிர்100’ சஞ்ஜீவ், ஸ்ரீஜா தாஸ், மீனாட்சி, மதுமிதா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் இங்கிலீஷ் படம். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை ECR பகுதியில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் சஞ்ஜீவ், ஸ்ரீஜா குழுவினர் ராம்கியை காரில் துரத்த, ராம்கி ஓடும் காரிலிருந்து குதித்து உயிர் தப்புவதுபோல் ஒரு ச்சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. இக்காட்சியில் இயக்குனர் எவ்வளவோ டூப் போட சொல்லியும் இந்த காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்று கூறி ராம்கி பிடிவாதமாக தானே நடித்தார்.

ராம்கி ஓடும் காரிலிருந்து குதிக்கும்பொழுது ராம்கியை துரத்தி வந்த கார் ப்ரேக் பிடிக்காமல் அவர் மீது மோத செல்ல ராம்கி தக்க சமயத்தில் சாமர்தியமாக செயல்பட்டு அதிலிருந்து தப்பித்தார். அந்த கார் ராம்கி ஓட்டி வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஸ்பாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேர தாமதத்திற்கு பிறகு மீண்டும் அக்காட்சி படமாக்கப்பட்டது. காட்சி மிக தத்ரூபமாக வந்ததையடுத்து அதை பார்த்த பட குழுவினர் மிகுந்த உற்சாகத்துடன் கைதட்டி ஆராவாரம் செய்தனர். இதை பற்றி இயக்குனர் குமரேஷ் குமார் கூறுகையில், ‘வளர்ந்து வரும் ஹீரோக்களே சிறிய ஜம்ப்பிங் காட்சிகளுக்கே டூப் போட்டுக்கொல்லும் இந்த காலக்கட்டத்தில் இவ்வளவு பெரிய காட்சியை டூப் போடாமல் ராம்கி நடித்து கொடுத்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது’ என்றார்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.