சென்னை கான்செப்ட் (Koncept Hospitals)மருத்துமனையில் இலவச இருதய பரிசோதனை முகாம்

Spread the love

சென்னை, பிப்ரவரி 11: சென்னையில் கான்செப்ட் மருத்துவமனை (Koncept Hospitals,Kodambakkam)சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல கான்செப்ட் மருத்துவமனை சார்பில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் எலும்பியல், மூட்டு, இருதயம், இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு நிபுணர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கினார்கள். மேலும், இருதய நோய் வருவதற்கான மூல காரணம், இருதய பாதிப்பை எப்படி உணருவது, இருதய நோய் வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் என பொதுமக்களுக்கு தேவையான பல பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தலைமை மருத்துவர் சங்கர் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவர்கள் டிஎஸ்ஆர் மோகனசெல்வன், பிரியங்கா, ஹரிமுருகன், இலக்கியா உள்ளிட்டோர் இலவச மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களைப் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். ஈ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே, நீரிழிவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய்த் தொற்று அதிகமாக இருப்பது உறுதியானால் அவர்களுக்கு தகுந்த மருத்துவமனைகள் பரிந்துரை செய்யப்பட்டன. இந்த இலவச மருத்து முகாமில் 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உரிய சிகிச்சைகளும் அரிய ஆலோசனைகளும் பெற்று பயன் பெற்று கொண்டு இருக்கின்றனர்

 

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.