ஓட்டு போடும் அவசியத்தை சொல்லும் “இணைய தலைமுறை”

Spread the love

Aswin kumar - Manisha jith (7)மாறன் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பெ.இளந்திருமாறன் தயாரிக்கும் படத்திற்கு “இணைய தலைமுறை” என்று பெயரிட்டுள்ளார்.

நாயகனாக அஸ்வின் குமார் நடிக்கிறார். இவர் டூரிங்டாக்கீஸ், மாதவனும் மலர்விழியும்” போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் நண்பர்கள் கவனத்திற்கு, விந்தை, கமர்கட்டு போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் ரவி, அசோக் பாண்டியன், சத்யன், சிவகுமார், சர்மிளா, சஞ்சய், சரத், வனகைதி, தென்னவன் ராஜேந்திரநாத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 29 ம் தேதி நடைபெற உள்ளது. இசை தட்டை திரு.சகாயம் IAS அவர்கள் வெளியிட உள்ளார்.

ஒளிப்பதிவு – ஆரோ
இசை – D.J.கோபிநாத்
பாடல்கள் – இளையகம்பன், பெ.இளந்திருமாறன்
கலை – தியாகு
நடனம் – ரமேஷ் கமல்
ஸ்டன்ட் – முரளிரகுநாத்
எடிட்டிங் – வில்ஸி
தயாரிப்பு நிர்வாகம் – அம்பிகா முஜீப்
கதை, தயாரிப்பு, மேலாண்மை இயக்கம் – பெ.இளந்திருமாறன்

திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – சு.சி.ஈஸ்வர். இவர் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..

வருகின்ற சட்டசபை தேர்தலில் அனைவரையும் ஓட்டு போட வைப்பதற்கு எளிமையான ஒரு வழியை கதாநாயகன் கண்டுபிடிக்கிறான். அதை கண்டு தேர்தல் ஆணையம் வியந்து பாராட்டுகிறது.

ஓட்டுப் போடாதவர்களால்தான் பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராசரும் அவர்களுடைய சொந்த தொகுதியிலேயே தோற்றார்கள். நல்லவர்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஓட்டு போடாமல் எதாவது ஒரு காரணத்தை சொல்லி வீட்டிலேயே இருந்து விடுபவர்களால் எப்படி ஒரு ஊரும், ஒரு குடும்பமும். நாடும் சீரழிகின்றது என்பதை அழுத்தமாகவும், அதே நேரத்தில் காமெடி, காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியலாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அனைவரையும் ஓட்டுப் போட வைப்பதற்கான டெக்னிக் பயன்படுத்தியுள்ளோம். வருகின்ற சட்டசபை தேர்தலில் இந்தப் படம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை ஓட்டே போடாதவர்கள், ஓட்டு போடாமல் அலட்சியமாக இருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். படத்தை பார்த்தவுடன் ஓட்டுப் போடவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படும்.

அனைவரையும் ஓட்டு போட வைப்பதற்கு கதாநாயகன் ஒரு டெக்னிக் கண்டுபிடிக்கிறான் அதை செயல்படுத்தி எப்படி எல்லோரையும் ஓட்டு போட வைக்கிறான் என்பதே படத்தின் திரைக்கதை.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.