காமெடி வில்லனாக பவர் ஸ்டார் நடிக்கும்”ஜெயிக்கப் போவது யாரு”

Spread the love

6அதிசய உலகம் படத்தை தயாரித்த டிட்டு புரொடக்ஷன்ஸ் ஆர்.பானுசித்ரா அடுத்து தயாரிக்கும் படத்திற்கு “ ஜெயிக்கப் போவது யாரு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன் நடிக்கிறார். நாயகனாக ஷக்திஸ்காட் நடிக்கிறார். நாயகியாக வந்தனா அறிமுகமாகிறார். மற்றும் சைதன்யா, அத்விக், ஷ்யாம் சுந்தர், சதீஷ்ராமகிருஷ்ணன், கோட்டி, வெங்கட், சோனல் பானர்ஜி, சையத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் – அத்விக், ஷக்திஸ்காட்
இசை – ஆண்டன் ஜெப்ரீன் – ஷக்திஸ்காட்
பாடல்கள் – ராமதாஸ், கோபிநாத், ஷக்திஸ்காட்
கலை – ஆர்.கே நடனம் – ராம்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங், ஒளிப்பதிவு செய்து இயக்கி இருப்பவர் ஷக்திஸ்காட் .
தயாரிப்பு – பானு சித்ரா

படம் பற்றி இயக்குனர் ஷக்திஸ்காட் கூறியதாவது…

இன்று அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டாலும் திருட்டுத் தனமாக நடந்து கொண்டிருப்பது கார்ரேஸ், பைக்ரேஸ் இதில் எத்தனையோ பேர் பலியாகிக் கொண்டிருகிறார்கள். ஆனால் இந்த ஜெயிக்கப் போவது யாரு படத்தில் இந்த ரேஸ் விஷயத்தை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி இருக்கிறோம். ஐந்து குருப்பை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி இருகிறார்கள். மூன்று கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு ஜீப் இதை வைத்து சீரியஸான விஷயத்தை காமெடியாகச் சொல்லி இருக்கிறோம். பெங்களூர், திண்டிவனம், ஆற்காடு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.