கஜா புயல் நிவாரணத்திற்கு களம் இறங்கும் ராகவா லாரன்ஸ்…

Spread the love

கஜாவின் கோரத்தாண்டவம் கொஞ்சமாக குறைந்து இருந்தாலும், மக்கள் இழந்ததை மீட்டெடுக்க பல வருடம் ஆகும். அதை மனதில் வைத்து பல பிரபலங்கள் டெல்டா மாவட்டங்களுக்கு பேருதவிகள் புரிந்து வருகின்றனர். தற்போது உச்சபட்சமாக நடிகர் ராகவா லாரன்ஸ் கஜா புயலால் வீடுகளை இழந்த 50 பேர்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர்,

“கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்..

எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த வீடு மட்டுமில்லை ..இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப் பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன்…அப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்…

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள் …

நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.. ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்..

…உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.