டிக்கெட் வாங்கினால் 143 பிராண்ட் கைலி இலவசம் – களவாணி சிறுக்கி தயாரிப்பாளரின் புது யுக்தி

Spread the love

ராணா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்கள் சாமி, திவாகர் ,அஞ்சு நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் களவாணி சிறுக்கி

கிராமத்தில் படித்துவிட்டு வீட்டில் இருக்கும் கஸ்தூரியை ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தாய் மாமா மருதுவிற்கு திருமணம் செய்துவைக்க கஸ்தூரியின் அம்மா ஏற்பாடு செய்கிறார் இந்நிலையில் அதே ஊரில் கறிக்கடை நடத்தும் பாண்டி என்பவனும் கஸ்தூரிக்கு மாமன் என்பதால் கலயாணத்தில் பிரச்சனை வருகிறது பாண்டியும் நான் தான் கஸ்தூரியை திருமணம் செய்வேன் என சவால்விட்டு செல்கிறான் .கஸ்தூரியிடம் டியூஷன் படிக்கும் கதிர் என்பவனுக்கு இவளை எப்படியாவது அடையவேண்டும் என்ற ஆசை உள்ளது .

அதே நேரத்தில் அந்த ஊரிற்கு வரும் டாக்டர் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கு காதல் மலர பல பிரச்சனைகளுக்கு நடுவில் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கு கல்யாணம் நடைபெறுகிறது .முதலிரவு நேரத்தில் அரவிந்த் இறந்துவிட, அரவிந்தை கொன்றது மருதுவா ,கதிரா என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம் தான் களவாணி சிறுக்கி

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 5 ம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ரசிகர்கள் கூட்டம் இப்போது திரையரங்கில் குறைந்து கொண்டு வருவதை அறிந்த இப்பட தயாரிப்பாளர் புது யுக்தி ஒன்றை கையாளப்போகிறார் அதுஎன்னவென்றால் படம் வெளியாகும் 5,6,7 ஆகிய தேதிகளில் காலை காட்சிக்கு மட்டும் திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்க்கு ஒரு விலையுர்ந்த 143 பிராண்ட் கைலி ஒன்றை பரிசாக தர திட்டமிட்டுள்ளார்.இதன் மூலம் ரசிகர்களும் திரைக்கு வருவார்கள் படமும் வெற்றிபெறும் என்கிறார் தயாரிப்பாளர் R.நமச்சிவாயம் .

இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

களவாணி சிறுக்கி ட்ரைலர் லிங்க் : https://youtu.be/u8xYV20jPV8

நடிகர்கள் :

சாமி – ஹீரோ
அஞ்சு – ஹீரோயின்
திவாகர் ,சங்கர் கணேஷ் ,கௌரி சங்கர் ,தமீம்,நமச்சிவாயம் ,கருப்பையா ,மாரியம்மாள் ,பிரேமலதா,வடிவேல் சுதா ,தீபா ,மீனா

தொழிநுட்பக்கலைஞர்கள் :

தயாரிப்பாளர் – R.நமச்சிவாயம்

கதை,திரைக்கதை,இயக்கம் – ரவி ராகுல்

வசனம் – நந்தா,ஷங்கர் சிவா

ஒளிப்பதிவு – D.மோகன்

எடிட்டிங் – ராம்நாத்

இசை – தருண் ஆன்டனி

கலை – சுரேஷ்

நடனம் – சிவா கிருஷ்ணா

சண்டை பயிற்சி – டேஞ்ஜர் மணி

லேப் – கியூப் சினிமாஸ்

தயாரிப்பு நிறுவனம் – ராணா கிரியேஷன்ஸ்

மக்கள் தொடர்பு – தியாகராஜன் P

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.