காமராஜர் பிறந்தநாள் விழா காமராஜர் திரைப்படம் ஒளிபரப்பு

Spread the love

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ எனும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்து 2004-ல் வெளியிட்டோம். இத்திரைப்படம் தமிழக அரசின் ‘சிறந்த படம்’ சிறப்புப் பரிசினைப் பெற்றது குறிப்பிடத் தக்கது. தற்போது காமராஜரின் வாழ்வில் நிகழ்ந்த உன்னத சம்பவங்களைத் தொகுத்து, நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிதாக 20 காட்சிகள் இத்திரைப்படத்தில் இணைக்கப் பட்டுள்ளன. காலம்தோறும் காமராஜரின் நினைவுகள் போற்றப்பட வேண்டும். பெருந்தலைவர் காமராஜரின் வழியில் அரசியல் அறம், நெறி, மனித நேயம் தவறாமல் இன்றைய புதிய சமுதாயம் மலர்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் காமராஜர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். வரும் ஜூலை 15 பெருந்தலைவர் காமராஜரின் 116 வது பிறந்தநாளை உலகறியக் கொண்டாடும் விதமாக காமராஜ் திரைப்படம் சத்தியம் தியேட்டரில் ஜூலை 15, மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.