பாசத்திற்காக ஏங்கும் குழந்தைகளின் கதை “கத சொல்லப் போறோம்”

Spread the love

katha solla poromவிக்டோரியா வாச் டாக் எஸ்.சுபாகரன் வழங்க RELAX ADDS PRODUCTIONS எஸ்.கல்யாண் தயாரிக்கும் படம் “கத சொல்லப் போறோம்”

இந்த படத்தில் பேபி ஷிபானா, ரவீனா, அரவிந்த், ரகுநாத், அர்ஜுன், ஜெனி ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மற்றும் ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, அக்ஷரா, காளி வெங்கட், பசங்க சிவகுமார் ராகுல் சாமுவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜெமின் ஜோம்அயாநாத்
இசை – பவன் / எடிட்டிங் – விஜய்
கலை – பத்மநாபன் / நடனம் – எஸ்.எல்.பாலாஜி
பாடல்கள் – கல்யாண், வினோதன்
தயாரிப்பு – RELAX ADDS PRODUCTIONS எஸ்.கல்யாண்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.கல்யாண். இவர் நாளைய இயக்குனர் போட்டியில் 8 குறும்படம் இயக்கியவர். படம் பற்றி அவர் கூறியதாவது…

இந்த படத்தில் இருபது குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனாதை ஆசிரமத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தைகளும் தாய் பாசத்திற்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள். ஒரு முறையாவது தனது அம்மாவை பார்த்து விட முடியாத என்ற ஏக்கம் அவர்களுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்படி இருக்கும் குழந்தைகளின் கதைதான் இந்த கத சொல்லப் போறோம்

படம் குழந்தைகளுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாமல் ஒரு மெசேஜ் சொல்ற படமாகவும் இருக்கும். இந்த படத்திற்கு வரிவிலக்கு கேட்டு இந்த படத்தை திரையிட்ட போது வரிவிலக்கு அதிகாரிகளாக வந்த வி.எஸ்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.எம்.ராஜம் ஆகியோர் படத்தை பார்த்து அழுது விட்டனர் படம் சிறப்பாக உள்ளது என்று பாராட்டி வரிவிலக்கும் அளித்தனர் என்றார் இயக்குனர் கல்யாண்.

படம் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்த்த சுபாகரன் தனது விக்டோரியா வாச் டாக் பட நிறுவனம் மூலம் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.