காமெடி ஹாரர் படமாக தயாராகும் ‘மேகி ’

Spread the love

ஸ்ரீசாய்கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து, இயக்கும் ‘மேகி என்கிற மரகதவல்லி ’ என்ற படம் காமெடி ஹாரர் படமாக தயாராகியிருக்கிறது.

இது குறித்து படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திகேயன் ஜெகதீஷ் பேசுகையில்,‘ காமெடி ஹாரர் ஜேனரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் ‘மேகி என்கிற மரகதவல்லி ’ என்ற படம் தயாராகியிருக்கிறது. வழக்கமாக அனைத்து பேய் படங்களிலும் பழிக்கு பழி வாங்கும் கதையிருக்கும். ஆனால் இந்த படத்தில் பேய் யாரையும் பழிவாங்கவில்லை. வயிறு வலிக்க சிரிக்கவைக்கும். இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் இந்த ‘மேகி’ பேயைப் பிடிக்கும்.

(கூத்துப்பட்டறையையில் பயிற்சிப் பெற்றவர் )‘ஆதித்யா’ செந்தில், ‘காலா’ படப்புகழ் ப்ரதீப், ரியா, நிம்மி, மன்னை சாதிக், என பல புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள். மணிராஜ் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் சிவன் படத்தைத் தொகுத்திருக்கிறார். பிரபாகரன் மற்றும் ஸ்டீவன் சதீஷ் என இரண்டு பேர் இசையமைத்திருக்கிறார்கள். கலைகுமார் பாடல்களை எழுதியிருக்கிறார்.

கொடைக்கானல் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் திட்டமிட்டப்படி இருபது நாட்களில் படபிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம். விரைவில் படத்தின் ஆடியோ வெளியிடு நடைபெறும்.’ என்றார்.

PHOTO GALLERY

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.