மாஸ்டர் படத்தில் “ஒரு குட்டி கதை” எனும் பாடலை பாடிய தளபதி விஜய் !

Spread the love

மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பினை பிலோமின் ராஜ் கவனிக்கிறார் .

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு , அர்ஜுன் தாஸ் ,அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன், கௌரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .

அனிரூத் இசையில் தளபதி விஜய் குரலில் ” ஒரு குட்டி கதை ” என தொடங்கும் முதல் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது .

இதற்கு முன்பு கத்தி படத்தில் அனிருத் இசையில் செல்பி புள்ள பாடலை தளபதி விஜய் பாடியது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் 2020 ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர் .

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.