எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் “நான் அவளை சந்தித்த போது”

Spread the love

Nan avalai santhithapothuசினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T. ரித்தீஷ்குமார் தயாரிக்கும் படத்திற்கு “நான் அவளை சந்தித்த போது” என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார்.

மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் நடிக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, ஜி.எம்.குமார், ராதா, பருத்திவீரன் சுஜாதா, ஸ்ரீரஞ்சனி, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், பரத்கல்யாண், சிங்கமுத்து, ரங்கா, சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆர்.எஸ்.செல்வா / இசை – ஹித்தேஷ் முருகவேல்
பாடல்கள் – அறிவுமதி, நா.முத்துக்குமார் / கலை – ஜெய்காந்த்
எடிட்டிங் – ராஜாமுகம்மது / நடனம் – சிவசங்கர்
ஸ்டன்ட் – ஹரி தினேஷ் / தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சம்பத்
தயாரிப்பு – V.T.ரித்தீஷ்குமார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – எல்.ஜி.ரவிசந்தர்.
இவர் மாசாணி, பரத் நடித்த ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி போன்ற படங்களை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்… 1996 ம் ஆண்டு நடந்த நிஜ சம்பவத்தை மையப் படுத்தி கதையை உருவாக்கி உள்ளோம். சினிமா பின்னணியை கொண்ட இந்த திரைக்கதையில், மதர் செண்டிமென்ட், காதல் கலந்த படமாக நான் அவளை சந்தித்த போது உருவாக்கப் பட உள்ளது !

படப்பிடிப்பு இன்று தமிழ் புத்தாண்டன்று துவங்கி தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர்

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.