​முதலிரவு பாடல் காட்சியில் நடித்த நாய்க்குட்டிகள்

Spread the love

naikuttygalநூற்றுக்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்ததுடன், தியேட்டர்களை நடத்திவந்த A. வெற்றிவேல் தனது வெற்றிவேல் 576 மெகா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்திற்கு “ நாய்க்குட்டிபடம் “ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். டோனி என்ற ஆண் நாய்க்குட்டி, ஜீனோ என்ற பெண் நாய்க்குட்டி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.காதலர்களாக நிதின் சத்யா ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்கள். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், மகாநதி சங்கர், பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி, ஜெயமணி, போண்டாமணி, கிங் காங், சிசர் மனோகர் அழகு, வாமன் மாலினி, ரவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆனந்த் / இசை – ஜெய.கே.தாஸ் / பாடல்கள் – மலைமன்னன்
கலை – பாபு / நடனம் – ஷெரீப் / ஸ்டன்ட் – நாக்அவுட் நந்தா
எடிட்டிங் – மாரீஸ்.ஜி.வெங்கடேஷ் / தயாரிப்பு நிர்வாகம் – தண்டபாணி
தயாரிப்பு மேற்பார்வை – வெங்கட்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரங்கா.. இவர் இயக்குனர்கள் S.D. ரமேஷ் செல்வன், சித்திரைசெல்வன், எல்.ஜி.ரவிசந்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

தயாரிப்பு – A.வெற்றிவேல்.

படம் பற்றி இயக்குனர்களிடம் கேட்டோம்.. மக்கள் ஒரே மாதிரியான கதையை விரும்புவதில்லை..ஏதாவது புதுசாக எதிர் பார்க்கின்றார்கள். அதற்காக யோசிச்சது தான் இந்தக்கதை. நிதின் சத்யா வளர்க்கும் நாய் டோனி.. ஸ்ருதி ராமகிருஷ்ணன் வளர்க்கும் நாய் ஜீனோ. இந்த நாய் குட்டிகளில் திடீரென்று டோனி காணாமல் போய் விடுகிறது. அந்த நாயை தேடி நிதின்சத்யா ஒரு பக்கம் அலைகிறார். இன்னொரு பக்கம் நான்கு திருடர்கள்..அத்துடன் அரசியல்வாதிகள் இருவர், இப்படி ஆளாளுக்கு அந்த நாயை ஏன் தேடுகிறார்கள் என்பது திரைக்கதை சுவாரஸ்யம். இதற்காக பக் இனத்து நாய்களை விலை கொடுத்து வாங்கினோம்.

நாங்கள் ஆறுமாதம் பழக்கப் படுத்தினோம். அதற்க்கு பிறகு தேவர் பிலிம்ஸின் நாய் டிரெயினர் லாரன்ஸ் ஒரு வருடம் டிரெயினிங் கொடுத்தார். இந்த நாய்கள் பிஸ்லரி வாட்டர் தான் குடிக்கும். சாதாரண நீரில் குளித்தால் முடி கொட்டிவிடும் என்பதால் கேன் வாட்டரில் தான் குளிக்க வைத்தோம்.. நல்ல விலையுயர்ந்த உணவு என்று ராஜமரியாதை! ஹீரோ, ஹீரோயினுக்கு நிகரான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தோம். இந்த படத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து, அதற்கு முதலிரவு ஏற்பாடு செய்து வைத்து “ குட்டி குட்டி நாய்க்குட்டி சுட்டி தனம் செய்யுது “ என்று டூயட்டும் வைத்திருக்கிறோம். முதல் ரீல் முதல் கடைசி ரீல் வரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம் என்றார் இயக்குனர் ரங்கா.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.