ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய அறிமுகம்

Spread the love

ஆன்லைன் வழியாக நேரடி விற்பனை செய்யும் மைவானடோ இணையதளம்

குண்டூசி முதல் அதிக விலையுள்ள பொருட்கள் வரை உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இருந்த இடத்தில் இருந்து ஆன்லைனில் வாங்குவதே பலருக்கும் விருப்பமாக இருக்கிறது. ஆனாலும், சில சமயங்களில் தரக்குறைவான பொருட்கள் வந்துவிடுவதும், தாமதமான டெலிவரியும் வாடிக்கையாளர்களுக்கு சலிப்பை உண்டாக்கி விடுகின்றன. சமயங்களில் அதுவே கசப்பான அனுபவம் ஆகிவிடுகிறது. தவிர, நேரடியாகப் பொருளைத் தொட்டுப் பார்த்து, மற்ற பொருட்களோடு அதனை ஒப்பிட்டு பார்த்து வாங்க விரும்புவோருக்கு, ஆன்லைன் வர்த்தகத்தில் வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமக தொடங்கப்பட்டிருப்பதுதான் மைவானடோ (MyWannado.com) இணையதளம்.

ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக அனுபவமுடைய தொழில் முனைவோர் குழு இதனை செயல்படுத்துகிறது. இதன் நிறுவனர்களான திரு. முருகன், திரு. ரமேஷ் சுப்பிரமணியன், திரு. பால சுப்பிரமணியன் ஆகியோர் முன்னணி ஆன்லைன் மற்றும் தகவல் தொடர்புத்துறை நிறுவனங்களான அக்செஞ்சர், மைக்ரோசாப்ட், பெஸ்ட் பை இணையதளங்களில் அமெரிக்காவில்பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள். அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்புற வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நுகர்வோர் முழு சுதந்திரத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் பொருளை வாங்கிடச் செய்வதுதான் மைவானடோவின் முதன்மையான குறிக்கோள். அதோடு, கடைக்காரரோடு நேரடியாகத் தொடர்பபை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இதில் உண்டாக்கப்படுகிறது.

செல்போன், டி.வி., என வாடிக்கையாளர் விரும்பும் எந்தப் பொருளாக இருந்தாலும், மைவானடோ இணையத்திற்கு வருகை தந்தால் போதும். வாங்க வேண்டிய பொருள் அருகில் எங்கே கிடைக்கும்? விலை விவரம் என்ன? எங்கே குறைவான விலையில் கிடைக்கும்? தரம் எங்கு அதிகம்? என முழுமையான அத்தனை தகவல்களும் மைவானடோவில் உண்டு.

வாடிக்கையாளர்களுக்காக முன்னணி பிராண்ட்களின் தயாரிப்புப் பொருட்கள் இந்த இணையதளத்திலேயே கிடைக்கும். தற்போது 20 லட்சம், பொருட்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கும். வரும் காலங்களில் அதன் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். இதனால், விரும்பிய பொருளை, மைவானடோவில் தேர்ந்தெடுத்து, அருகில் உள்ள கடைக்குச் சென்று, நேரடியாக வாங்கிக் கொள்ளலாம். இதனால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவதோடு, விற்பனையாளர்களுக்கும் விற்பனை அதிகரிக்கும். அதாவது, ஆன்லைன் வர்த்தகம் மூலமாக வியாபாரிகள், விற்பனையாளர்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைத்து, இரு தரப்பினரிடையேயும் நல்ல உறவு மேம்படும். இதுவே, மைவானடோவின் தலையாய நோக்கம்.

இணையதளம், மொபைல் அப்ளிகேஷன், செல்போன் குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் தகவல், ஃபேஸ்புக், ட்விட்டர் இணையதளம் என இணையத்தின் எந்த வசதியைப் பயன்படுத்தியும் பொருட்களை ஆர்டர் செய்திட முடியும் என்பது மை வானடோவின் சிறப்பம்சம். தவிர, ஆர்டர் செய்த 4 மணி நேரத்திற்குள் பொருளை வாடிக்கையாளரின் கையில் சேர்ப்பது மை வானடோவின் முக்கிய குறிக்கோள். ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்டர் செய்யும் பொருள், அந்த நிறுவனம் அனுப்பும் நேரத்தில்தான் வாங்கிடும்படி இருக்கும் முறையும் இதில் இல்லை. வேலையை முடித்து வீட்டுக்குச் செல்லும்போது கூட, பொருளை வாங்கிச் செல்லலாம். இதில், வாடிக்கையாளரின் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளருக்கும் நேரடியாக வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும், அவர்களுக்கு வாங்கும் அனுபவத்தை நல்ல விதமாக ஏற்படுத்தித் தருவதுமே மைவானடோவின் நோக்கம்.

பொருளை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். அதற்கு கால வரையறை ஏதும் கிடையாது. விசேஷ காலங்களில் பொருட்களை வாங்குவதற்கென்று பல ஆஃபர்களையும் அளிக்கிறது மைவானடோ. பிறந்த நாள், திருமண நாள், தீபாவளி, பொங்கல் என பண்டிகைக் காலங்களில் சிறப்பு சலுகைகளும் உண்டு. அதேபோல், விரும்பிய நேரத்தில் பொருளை டெலிவரி பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் பொருளை, உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்து, அவர்களின் கருத்தையும் கேட்டுக் கொண்டும் வாங்கிப் பயன்படுத்தலாம். இப்படி, வாடிக்கையாளர்களைக் கவரும் பல நவீன அம்சங்களுடன் அமைந்ததுதான் மைவானடோ.

கிரடிட் கார்டு தேவையில்லை…

கிரடிட் கார்டு, வங்கி ஏ.டி.எம், பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்து வந்தாலும், இன்னும் அதைப் பயன்படுத்துவது குறித்த முழுமையான விழிப்புணர்வு இந்தியாவில் வரவில்லைதான். கார்டு மூலம் பணம் செலுத்தவும், தங்களது பின் நம்பரைக் கொடுக்கவும் இப்போதும் தயக்கம் காட்டத்தான் செய்கிறார்கள். பணத்தை செலுத்தி நேரடியாக வாங்க விரும்புவோருக்கான வசதியும் இதில் உண்டு. வேண்டிய பொருளை ஆர்டர் கொடுத்துவிட்டு, அருகில் உள்ள கேஷ் கியோஸ்க் (‘MyWannado Cash Kiosk’) மையத்தில் பணத்தைச் செலுத்திவிட்டால் போதும். இந்தியா முழுமைக்குமே இந்த வசதி செய்து தரப்படவுள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் உள்ளோருக்கு, நிச்சயமாக புதியதோர் ஷாப்பிங் அனுபவத்தை மைவான்டோ தரும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

எங்களைத் தொடர்பு கொள்ள

Email: admin@mywannado.com

Web: www.mywannado.com

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.