33 வருட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – பாம்பன் சுவாமிகளின் சமாதி

Spread the love

சுவாமிகளின் குருபூஜை,மகா கந்தசஷ்டி,மயூரவாகன சேவன விழாக்கள் ஆகியவற்றை சுவாமிகளின் பாடல்கள் பாரயணத்தோடு நடந்திவருகின்றோம். சுவாமிகள் இராமேஸ்வரம் திருத்தலத்தில். 1850-52 இடையில் அவதரித்தார்.யௌவனப்பருவம் பாம்பன் திருத்தலத்தில் கழிக்கப்பட்டது.பிறகு தமிழ் நாடு, ஆந்திரா, வட இந்திய நாட்டிலுள்ள பல திருத்தல கோயில்களில் தரிசித்தார்.அவருக்கு காசி திருத்தலத்தின் குமர குரபரர் மடத்தில் கல்லாடை வழங்கப்பட்டு அன்று முதல் வெண்மை நிற ஆடை தவித்தார் சுவாமிகள் காவி ஆடை அணியத் தொடங்கினார். சுவாமிகள் 35 ஆண்டுகளுக்கு மேலாக துறவியாக சென்னையிலும் சிதம்பரத்திலும் வாழ்ந்து வந்தார்கள். சுவாமிகள் மிகச்சிறந்த கல்விமான்.தமிழிலும் வடமொழியிலும் மிக்க புலமை வாய்ந்தவர்.போற்றுதலுக்குரிய எழுத்தாற்றாலர். 6666 திருவருடப்பாடல்களுக்கு 32 வியாசங்களையும் மக்கள் நல்வாழ்வுக்காக இறையருளுடன் இயற்றினார்.பாராட்டுதலுக்குரிய தத்துவ மேதை,சைவம்,சைவசித்தாந்தம் ஆகியவைகளை அறிய நுணுக்கமான செய்திகளை வெளியிட்டார்.சைவ சித்தார்ந்த விளங்கிய பிரபல மேதைகளில் ஒருவராக போற்றப்படுபவர். அவருக்கு இரண்டு முக்கிய தெய்வீக திருவருள் நிகழ்வுகள் நடந்தன.

(1)1984 ஆம் ஆண்டில் இராமேஸ்வரத்திற்கு அருகாமையிலுள்ள பிரப்பன்வலசை சிற்றூரில் 6அடி குழியில் தங்கி 35நாட்கள் ஊண்,உறக்கம் இல்லாமல் கடிய தவம் செய்து பழநியாண்டவர்,அருணகிரிநாதர்,அகத்தியர் தரிசனம் பெற்று பழநியாண்டவரிடம் உபதேசம் பெற்றார்.இந்த அனுபவத்தை தகராலயரகசிய நூலில் பாடல்களாக விளக்கியுள்ளார்.

(2)1926 சென்னையில் குதிரைவண்டி மோதலால் கால் எழும்பு முறியப்பட்டார்.சென்னை அரசாங்க மருத்துவர்கள் சுவாமிகள் முதிர்ந்த வயது மற்றும் உப்பில்லா உணவு ஆகியவைகளின் அடிப்படையில் எழும்பு கூடாது என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.இதை சுவாமிகள் ஏற்காது முருகப்பெருமான் கை விட மாட்டார் என்ற உறுதியோடு இருந்தார்.11வது நாள் இரவில் இரண்டு பெரிய மையில்களின் நடனத்தையும் பிறகு தம் படுக்கையின் பக்கத்தில் சிறு குழந்தை படுத்திருப்பதையும் கண்டுகளித்தார் பிறகு மருத்துவர்கள் Xeray படம் எடுத்தபோது கால் எலும்பு கூடி வருவதைக்கண்டு ஆங்கில மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர்.15நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து பிறகு எந்தவித ஊனமும் இல்லாமல் நடந்து சீடர்கள் வீட்டிற்கு அடைந்தார்.

இந்த அற்புத நிகழ்ச்சி வருடந்தோறும் மயூரவாகன சேவன விழாவாக மகாதேஜோ மண்டல சபையை சிறப்புடன் நடத்தி வரப்படுகின்றது.இந்த அனுபவத்தை சுவாமிகள் “அசோகசாலவாசம்” நூலில் பாடல்களாக விளக்கியுள்ளார்கள்.இச்செய்தி அரசு மருத்துவமனை 11ஆம் வார்டில் கல் புதைக்கப்பட்ட கல்வெட்டில் இன்றும் உள்ளது.இதில் ஐந்து மருத்துவர்கள் பெயர்கள் உள்ளன. மகாதேஜோ மண்டல சபை நிர்வாகத்தை 15.09.2018 எடுத்துக்கொண்டு சுவாமிகளின் கருவறைத் திறந்து அங்கு வழிபாடு செய்யத் தொடங்கியது.இக்கருவறை கடந்த 33வருடங்களாக இந்து அறநிலையத்துறையினரால் பூட்டிவைக்கப்பட்டிருந்தது.

தினசரி பூஜைகள் கருவறையில் தொடர்ந்து சபையினரால் நடத்தப்படும்.புனித நீர்(கும்பாபிஷேகத்தை)நிகழ்ச்சியைச் சபையினரால் கூடிய சீக்கிரத்தில் செய்ய உள்ளனர்..

செ.வே.சதாநந்தம்,தலைவர் மகாதேஜோமண்டலசபை,
செல்:9444004136,போன்:044-43204136,2489049.

சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.