சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடைபெற்ற பறந்து செல்ல வா பாடல் வெளியீடு

Spread the love

SVN_0635சிங்கப்பூரில் 18.06.2016 அன்று நடைபெற்ற பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ட்ரெய்லரை வெளியிட்டுப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் தமிழக மற்றும் சிங்கப்பூர் கலைஞர்களின் பங்களிப்புடன் தயாராகியுள்ள இத்திரைப்படம் ஒரு முன்னோடி முயற்சி என குறிப்பிட்டார்.

படத்தின் இசைத்தட்டை நாடாளுமன்ற நியமன உறுப்பினர் கணேஷ் ராஜாராம் வெளியிட இயக்குனர் பா. ரஞ்சித் பெற்றுக் கொண்டார்.

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் முக்கிய தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட இவ்விழாவின் ஏற்பாடுகள் வண்ணமயமாக இருந்தது. ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்ட பெரும்பாலான இடங்கள் தாங்களே பார்க்காத புது இடங்கள் என பார்வையாளர்கள் பிரமித்துப் போனார்கள். சிங்கப்பூர் மக்கள் காலத்திற்கும் கொண்டாடும் படமாக இத்திரைப்படம் இருக்கும் என சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஒருமனதாகப் பாராட்டினார்கள்.

காதல் படத்திற்குப் பிறகு ஜோஷ்வா ஶ்ரீதரின் முழுமையான ஆல்பமாக மனதை வருடும் பாடல்களுடன் இப்படத்தின் பாடல்கள் இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஜூன் 24 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.