பேட்ட படத்தின் புது போஸ்டர்
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் பேட்ட’ படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் அனிருத் இசையமைத்து வருகிறார். ஊட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் டேராடூன், டார்ஜிலிங், சென்னை, லடாக், ஐரோப்பா, வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், பேட்ட படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில், ரஜினிகாந்த் மற்றும் சிம்ரன் இருவரும் இடம்பெற்றுள்ளார்கள் மேலும், இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது