பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்!

Spread the love

ஒரு காதலிச்சு கல்யாணம் செய்வதற்குள் கர்ப்பம் ஆகிவிடுகிறாள். கல்யாணம் செய்ய முயன்றும் தடைகள் ஏற்படுகிறது. அதற்குள் கருவில் இருந்த சிசுவும் வளர்ந்து விடுகிறது. இருப்பினும் கருக்கலைப்பு செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் மருத்துவர்கள் மறுத்துவிடுகின்றனர். திடீரென வயிற்றிலிருந்த குழந்தை தாயின் கண் முன்னே தோன்றி என்னை கொல்லாதே அம்மா என்று சொல்வது போல் அந்த பெண்ணுக்கு தோன்ற மனம் மாறுகிறது. இவ்வாறான மனதை தொடும் கதை 20 நிமிட குறும் படமாக உருவாகியுள்ளது.

கதையின் பாத்திரங்களாக ஸ்ரீ, ராஜா, பானு ஆகியோர் நடித்துள்ளனர்.

தாய்லாந்தில் 300 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதில் இந்த பாசிட்டிவ் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டது.

1.Foriegn Language Award
2.Audience Online Award
3.Audience Stadium Award ஆகிய மூன்று விருதுகளை பெற்றது.

தாய்லாந்தில் இது போன்ற அவல நிலை நிலவி வருவது அறிந்ததே இந்த குறும்படத்தை பார்த்து திருந்தினார்களானால் இதுவும் விருது தான் என்கிறார் இயக்குனர் அமின் இவர் இதுவரை 50 குறும்படங்களை இயக்கி உள்ளார். அனுபவம் புதுமை எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

ஒளிப்பதிவு : ஜெயம் கொண்டான்
இசை: கஜா தானு
கதை திரைக்கதை வசனம் இயக்கம்: அமின்.

POSITIVE – An International Tamil Short Film – https://youtu.be/FbscrmscHM0

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.