ராஜவம்சம் இசை வெளியீட்டு விழா

Spread the love

செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரித்துள்ள படம் ராஜவம்சம். சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு எழுதி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் பேசியதாவது,

“இயக்குநர் கதை சொன்னதும் படம் பண்ண ஹீரோவிடம் டேட் கேட்டோம். அவரும் உடனே டேட் கொடுத்தார். அடுத்து இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி படம் எடுப்பது என்று யோசித்தேன். ஆனால் இயக்குநர் “சார் எடுத்துவிடலாம் சார்” என்று நம்பிக்கையாகச் சொன்னார். இந்தப்படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் மற்ற அனைத்து நடிகர்களும் யோசிக்காமல் டேட் கொடுத்தார்கள். இப்படத்தில் ஒத்துழைத்து கொடுத்து நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கு என் நன்றி” என்றார்

நடிகர் விஜயகுமார் பேசியதாவது,

“ராஜ வம்சம்..இந்தப்படம் ஒரு ராஜவம்சம். சசிகுமார் சிறந்த நடிகர் சிறந்த பண்பாளர், சிறந்த தம்பி. அவரைப்போல ஒருவரை நான் பார்த்ததே இல்லை. நிக்கி கல்ராணி நல்ல நடிகை. சிறப்பா நடிச்சிருக்காங்க. இத்தனை கலைஞர்களை வைத்து வேலை வாங்கும் திறமை கதிர்வேலு அவர்களுக்கு இருக்கிறது. இந்தப்படம் பெரிய குடும்பப் படம். தமிழ்நாட்டில் எல்லாக் குடும்பங்களும் பார்க்க கூடியப்படமாக இருக்கும். இந்தப்படத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்” என்றார்

ஆர்.கே செல்வமணி பேசியதாவது,

“இந்தப்படத்தின் இயக்குநர் கதிர்வேலுக்கு என் பெரிய வாழ்த்துகள். ஏன்னா இவ்வளவு நடிகர்ளை ஒன்றாக வைத்து என்னால் ஒரு போட்டோ கூட எடுக்க முடியாது. கதிர்வேலு நல்ல திறமையாளர். ஒரு படத்தில் ஹீரோ அஸ்ஜெஸ்ட் பண்ணிப் போகலன்னா படமே எடுக்க முடியாது. அதற்கு சசிகுமாருக்கு நன்றி. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக இங்கு வந்து நல்ல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார் அவருக்கும் நன்றி. இங்கு இந்தத் தயாரிப்பாளரை நான் இப்போது தான் பார்த்தேன் என்று விஜயகுமார் சார் சொன்னார். அந்த வகையில் இயக்குநர் கதிர்வேலு கொடுத்து வைத்தவர். இந்தப்படம் செண்டிமெண்டாக நிச்சயம் ஓடும் என்று தோன்றுகிறது.

திட்டமிட்டு படத்தை முடித்திருக்கிறார் கதிர். இவ்வளவு பிரம்மாண்டமான படத்தை 50 நாளில் முடித்துள்ளது பெரிய விசயம். படப்பிடிப்பில் உயிரிழப்புகளை இனி தவிர்க்க வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்கள் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றார்

நடிகர் ராதாரவி பேசியது ,

“விழாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் என் வணக்கம். ராதாரவி பேசினால் சர்ச்சை என்கிறார்கள். என் பேச்சு புரியாதவர்களுக்குத் தான் சர்ச்சை. இந்தச் சகோதரர் கதிர்வேலு ரொம்பப் போராடி வந்திருக்கிறார். தயாரிப்பாளரை நான் இன்று தான் பார்க்கிறேன். சசிகுமார் தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர். ரொம்ப தங்கமான பிள்ளை. இப்ப நிறைய நடிகர்கள் பாடிகாடோடு வருகிறார்கள். சசிகுமார் ரொம்ப எளிமையாக இருக்கிறார். கேமராமேன் எங்களை போகஸ் பண்ணவே இல்லை. கேமராவுக்கு முன் யார் வருகிறார்களோ அவர்களை எடுத்துக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால் சந்தோஷமாக நடித்தேன்.

சசிகுமாருக்கு இது செகண்ட் லைப் என்றார்கள். அவருக்கு இப்போது இருப்பதே நயிஷ் லைப் தான். நிக்கி கல்ராணி நல்லா நடிச்சிருக்கு. அவருக்கு எல்லாக் கேரக்டருக்கும் பொருத்தமான நடிகை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும் என்றார்கள். அது நல்ல விசயம். நானும் இந்தி கற்றிருந்தால் இன்னைக்கு அங்கே எனக்குப் பெரிய இடம் கிடைத்திருக்கும். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பாருங்கள்” என்றார்

சாம் சி எஸ் பேசியதாவது,

“வில்லேஜ் படங்கள் எல்லாம் எனக்கு வருவதே இல்லை.கூட்டுக் குடும்பத்தின் வேல்யூ எல்லாம் எனக்குத் தெரியும். எனக்கு கம்பம் அருகே தான் சொந்த ஊர். அதனால் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை படமாக்கும் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு இயக்குநர் கதிர்வேலுக்கு நன்றி” என்றார்

நிக்கி கல்ராணி,

நான் முழுக்க முழுக்க சிட்டில வளர்ந்த பொண்ணு. அதனால் கிராம கல்ச்சர் எனக்குப் புது அனுபவமாக இருந்தது. நல்ல அனுபவத்தைத் தந்த கதிர்வேலு சாருக்கு நன்றி. சூட்டிங்ல நல்ல எக்ஸ்பீரியன்ஸ். இந்த ராஜவம்சம் இவ்வளவு க்ராண்டியரா இருக்குன்னா மூன்று பேர்தான் காரணம். நடிகர் சசிகுமார் சார், தயாரிப்பாளர் ராஜா சார், இயக்குநர் கதிர்வேலு இவர்கள் மூன்றுபேரும் தான். படத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி”என்றார்

இயக்குநர் கதிர்வேலு பேசியதாவது,

“சசிகுமார் சார் கதையைக் கேட்டுட்டு ரொம்ப நல்லாருக்குடா என்றார். தயாரிப்பாளரும் கதை கேட்ட உடனே என்னை கமிட் செய்தார். இந்தப்படம் இன்னைக்கு இப்படியொரு ஸ்டேஜ்ல இருக்கான்னா அதுக்கு முழு முதல் காரணம் ராஜா சார். நான் யோசிச்ச விசயத்தை ஸ்கிரீன்ல கொண்டு வர ராஜா சார் ரொம்ப சப்போர்ட் பண்ணார். என்னோட ஆர்டிஸ்ட் எல்லாரும் நன்றாக உதவி செய்தார்கள். யாரும் என்னிடம் கதையே கேட்கவில்லை. சசிகுமார் நிக்கி கல்ராணி இருவரிடம் மட்டும் தான் முழுக்கதையையும் சொன்னேன். கேமராமேன் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணார். அப்படியே தான் எடிட்டரும். சாம் சி எஸ் என் டார்லிங். அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தான் சாம் சி எஸ்ஸை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பக்காவாக பி.ஜி எம் போட்டிருக்கார். இந்தப்படம் ரொம்ப ரொம்ப நல்ல படம். அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார்

நடிகர் சசிகுமார் பேசியதாவது,

“வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி. ராஜவம்சம் கூட்டுக் குடும்பத்தைப் பற்றிச் சொல்ற படம். அதைக் குடும்பமாகப் பார்க்கும் போது நம்ம எல்லாருக்கும் பிடிக்கும். நாற்பது நடிகர்கள் இருக்கிற படம்னா பட்ஜெட் ஜாஸ்தியாக இருக்குமே என்று நினைத்தோம். ஆனால் தயாரிப்பாளர் ராஜா சார் ரொம்ப நம்பிக்கையாக இருந்தார். இந்தப்படம் ஒரு நல்ல பீல் குட் படமாக இருக்கும். பெரியபெரிய சீனியர் நடிகர்களோடு நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இவ்ளோ பேரையும் கேண்டில் பண்ணிய கதிரும் கேமராமேனும் பாராட்டுக்குரியவர்கள். பர்ஸ்ட் இந்த டீம் பார்ம் ஆகுறதுக்குள் கொஞ்சம் சிரமமாக இருந்தது. பின் போகப்போக சரியாகிவிட்டது. இந்தப்படத்தில் எல்லாருமே அழகாக இருக்கிறார்கள். சினிமாவிலும் நாம் ஒரு குடும்பமாகத் தான் இருக்க வேண்டும்” என்றார்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.