ரஜினியின் அரசியல் கொள்கை பற்றிய பாரதிராஜாவின் பார்வை

Spread the love

எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும்ரஜினிஎன்ற மந்திரத்தை விட, ரஜினிஎன்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். இன்று அந்த மனிதம்  வெளிப்படையாகமக்களுக்கு நன்மை  பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது.

தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறுஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.

ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம்.

ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த  மனிதனாக, ரஜினியின்நாணய அரசியலில்அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனைஅரசனாகஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற  ஓர் மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல்  அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.