ரஞ்சித் மேனன் இயக்கத்தில் “அன்பென்றாலே அம்மா” இசை வீடியோ ஆல்பம்
விக்ரமன் இயக்கத்தில் “ நினைத்தது யாரோ “ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ரஞ்சித்மேனன். இவரது இயக்கத்தில் “ அன்பென்றாலே அம்மா “ என்ற இசை வீடியோ ஆல்பம் உருவாகி உள்ளது.
இந்த வீடியோ ஆல்பத்தில் ஜரீனா வஹாப் அம்மாவாக நடித்திருக்கிறார். ஜரீனா வஹாப் எம்.ஜி.ஆருடன் நவரத்தினம் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர்.
அத்துடன் கமலுடன் “ விஸ்வரூபம், சூர்யாவுடன் ரத்த சரித்திரம் போன்ற படங்களில் நடித்தவர். மற்றும் ஜிகினா படநாயகன் ஆன்சன், உலக புகழ்பெற்ற மாடல் அழகி ஸ்ருதி மற்றும் ஏராளமான குழந்தைகளும் நடித்துள்ளனர்.
ஏழு நிமிடம் ஓடக்கூடிய இந்த இசை வீடியோ ஆல்பத்தில் நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று ஜரீனா வஹாப் கூறி உள்ளார். பிரபல ஹிந்தி நடிகையான ஜரீனா வஹாப் கார், பங்களா, நகை, பணம் என்று எதுவுமே எந்த தாய்க்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தி விடாது. மகன், மகள்களின் அன்புக்கு இது எதுவுமே ஈடாகாது. என்கிற உயரிய கருத்தை இதில் சொல்லியிருக்கிறோம் என்று ரஞ்சித்மேனன் கூறினார்.
மலையா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்தில் ஸ்வேதா மோகன் பாட, ரஞ்சித் உன்னி இசை அமைக்க, சாரதி பாடலை எழுதி உள்ளார். டைம்ஸ் மியூசிக் ஜனவரி 26 ம் தேதி அன்று இந்த வீடியோ இசை ஆல்பத்தை வெளியிடுகிறது.