ஷீரடி பாபாவாக நடித்ததை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன் தலைவாசல் விஜய்

Spread the love

_DSC6978நான் இதுவரை தமிழ், மலையாளம் மற்றும் பிறமொழிப் படங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அவற்றுள் தலைவாசல், தேவர் மகன் போன்ற சிறந்த பல படங்கள் இருந்தாலும், 2010-ல் மலையாளத்தில் வெளிவந்த ‘யுக புருஷன்’ படத்தில் நாராயண குருவாகவும், இப்போது தமிழில் ‘அபூர்வ மகான்’ படத்தில் ஷீரடி பாபாவாகவும் நடித்ததை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். மற்ற படங்களில் நடிப்பது என்பது வேறு. ஆனால், நாராயணகுரு, பாபா போன்ற மகா புருஷர்களின் பாத்திரமாக நடிப்பதென்பது கிடைத்தற்கரிய பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.

வேறெந்த படங்களிலும் இல்லாத மனநிறைவு இப்படங்களில் நடிக்கும்போது கிடைத்தது. நாராயண குருவாக நடித்ததற்கு கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது (special jury award) எனக்குக் கிடைத்தது. தெலுங்கில் ஏற்கெனவே ஷீரடி பாபாவாக நாகார்ஜூன் நடித்துள்ளார். பாபா குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் படம் இது. ஐந்தாண்டுகளுக்குள் மீண்டும் ஒரு மகானின் பாத்திரத்தில் தமிழில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை ஒரு பாக்கியமாகவும் ஒரு தமிழ்நடிகனாக இருப்பதைப் பெருமையாகவும் கருதுகிறேன். நாராயண குரு படத்தைப் போன்றே பாபா படத்திலும் கருத்தை உள்வாங்கிச் செய்திருக்கிறேன். எனவே, பாபா படமும் எனக்கு அத்தகைய பெருமையைத் தேடித்தரும் என்றே நம்புகிறேன்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.