இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “திருப்பதிசாமி குடும்பம் “

 ஜெம்ஸ் பிக்சர்ஸ்  முருகானந்தம்.G , ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா  இணைந்து  வழங்கும்   படம்   “ திருப்பதிசாமி குடும்பம்“                                                                                                                            

இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார்.   முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.                                                                              

ஒளிப்பதிவு   –  Y.M.முரளி / இசை   –  சாம் டி.ராஜ்                                                                           

எடிட்டிங்   –  ராஜா முகமது / நடனம்   –  தினேஷ், ஹபீப் / ஸ்டன்ட்   –  பயர் கார்த்திக்                                                        

இணை தயாரிப்பு  –  திருப்பூர்  K L K.மோகன்                                                                   

தயாரிப்பு  –      பாபுராஜா, B.ஜாஃபர் அஷ்ரப்                                                                                                                                          

இயக்கம்   –  சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர்.                                                                                                                

படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறியதாவது…

ஒரு குடும்பத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை இது. நிறைய பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கை நிம்மதியா வாழலாம் என்று நினைகிறார்கள். அனால் பணம் இல்லா விட்டாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய கதை.

அப்படி வாழும் ஒரு குடும்பத்திற்கு சில சமூக விரோதிகளால் நிறைய பிரச்னைகள் உருவாகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் புத்திசாலி தனமாக பிரச்னைகளை சமாளித்து  எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை.

காக்கா முட்டை, பசங்க, கோலிசோடா வரிசையில் திருப்பதி சாமி குடும்பமும் வெற்றி பெற்று பாராட்டை பெரும் என்று நம்பிக்கையுடம் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் பாபுராஜா.

படம் இம்மமாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *