யோகா2கோ – சென்னையின் புதிய யோகா ஸ்டுடியோ

Spread the love

யோகா2கோ, புத்தம் புதிய யோகா ஸ்டுடியோ சென்னையில் இன்று திறக்கப்பட்டது. ஐடியல் ப்ளேஅபாகஸ் இயக்குநர் ஷாரதா ஶ்ரீராம் முன்னிலையில், காதலும் கடந்து போகும் (2016), சீதக்காதி (2018) படப்புகழ் நடிகர் ஜி.எம்.சுந்தர் யோகா2கோ ஸ்டுடியோவை திறந்து வைத்தார்.

சென்னை பெசன்ட் நகர், M60/2, 4-வது குறுக்கு தெருவில் அமைந்துள்ளதுயோகா2கோ ஸ்டுடியோ. ஹதா யோகா, பவர் யோகா, வின்யாசா ப்ளோ யோகா, சிகிச்சை யோகா, பெண்கள், குழந்தைகள் உடல் நலனுக்கான யோகா, முதியோருக்கான யோகா, ஆக்ரோ யோகா, அக்வா யோகா, பிராணயமா, தியானம், விளையாட்டு துறை சார்ந்தவர்கள், நடன கலைஞர்கள், அலுவலர்களுக்கான யோகா வகுப்புகள் போன்ற பல்வேறு வகையான யோகா முறைகள் இங்குக் கற்றுத்தரப்படும்.

தொடக்க விழாவில் பேசிய யோகா2கோ ஸ்டுடியோ இயக்குநர் திரு.ரமணன் விஸ்வநாதன், “இந்திய மண்ணைப் பூர்வீகமாக கொண்ட யோகா கலை, மனித உடல் நலத்தைச் சீராக வைக்க உதவுகிறது. யோகாசனங்களை முறையாக கற்று கொள்ள முடியும். யோகா பயிற்சிகளை சரியாகச் செய்து வந்தால், எந்தவித சோர்வும் ஏற்படாது வாழ்க்கையை இனிமையாக வழி நடத்திச் செல்ல முடியும்” என்றார். மேலும், “உண்மையான தூய்மையான யோகா கலையைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு செய்வது முக்கியம். அனைவரும் பயன்பெற, யோகாவை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிப்பதே எனது குறிக்கோள்” என்றார்

யோகா2கோ ஸ்டுடியோ வகுப்புகள் காலை 5 மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு வகுப்பும் ஒரு மணி நேரம் எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94440 84271 / 90807 77214

15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜிம்னாஸ்டிக் பயிற்றுவித்தல், விளையாட்டு மேலாண்மை, உடல் நலம் காத்தல், யோகாசனம் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்த திரு.ரமணன், 7 வயதிலேயே தன் திறமையைக் கண்டறிந்தவர். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியால், இளம் வயதிலேயே ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, மாநில – தேசிய அளவிலான தொடர்களில் பதக்கங்களை அள்ளியவர். பள்ளிகள், அலுவலகங்கள், யோகா ஸ்டுடியோக்கள் என பல்வேறு இடங்களில் திரு.ரமணனின் வகுப்புகள் விரிவடைந்துள்ளன. சென்னை டென்னிஸ் அகாடமிக்கு ‘காம்படிடிவ் எட்ஜ்’ எனப்படும் யோகா பயிற்சி பட்டறையை நடத்தியவர். காஸ்மிக் மியூசிக் சார்பில், ரமணன் பங்கு பெறும்‘ஹெல்த் அண்ட் ஸ்ட்ரெஸ் ரிலீஃப்” என்ற வி.சி.டி வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Watch Video of this event

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.