யோகி பாபுவின் மோசமான மறுபக்கம்! – உதவியாளர்கள் கூறும் பரபரப்பு புகார்

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, குறித்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. தயாரிப்பாளர் ஒருவரிடம் ரூ.25 லட்சம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு பல வருடங்கள் ஆகியும் இன்னும் தேதி கொடுக்கவில்லையாம். அதோடு பணத்தையும் திருப்பி கொடுக்காமல் எஸ்கேப் ஆகி வருகிறாராம்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில், பாதிக்கப்பட்டவர் யோகி பாபு மீது புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக பஞ்சாயத்து நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு நாளுக்கு சுமார் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு, தனக்கு உதவியாளர்களாக இருப்பவர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பேட்டாவையும் தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதோடு, அதை கொடுக்காமல் அலக்கழிக்கிறாராம்.

டச்சப், காமெடி காட்சிகள் எழுதுவது, டிரைவர் என்று யோகி பாபுவிடம் சிலர் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு பேட்டாவாக படம் தயாரிக்கும் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1000 வழங்குவதாக கூறப்படுகிறது. அதே சமயம், இந்த பேட்டாவை வங்கி கணக்கில் செலுத்தும் நடைமுறையை சில நிறுவனங்கள் பின்பற்றுவதால், யோகி பாபு அந்த நிறுவனங்களிடம் உதவியாளர் அவர் அவர் வங்கி கணக்குகளை கொடுக்காமல், தனது வங்கி கணக்கை கொடுத்திருக்கிறாராம்.

அதன்படி, யோகி பாபுவின் வங்கி கணக்கில் அந்த தொகை டெப்பாசிட் ஆனாலும், அதை எடுத்து அவர் உதவியாளர்களுக்கு கொடுக்காமல் அலக்கழிப்பதாக உதவியாளர் ஒருவர் புலம்புகிறார். மேலும், படப்பிடிப்பு முடிந்த பிறகு உதவியாளர்களை வீட்டுக்கு அனுப்பாமல் அலுவலகத்திலேயே தங்க வைத்து, அடுத்த நாள் படப்பிடிப்புக்கான பணியில் ஈடுபடுமாறு சொல்கிறாராம்.

இப்படி இரவு, பகலாக உதவியாளர்களிடம் வேலை வாங்கும் யோகி பாபு, அவர்களுக்கான ஊதியத்தை மட்டும் கொடுக்காமல் இருக்க, சிலர் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்ட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சினிமாவில் சிரிப்பு காட்டும் யோகி பாபு நிஜ வாழ்க்கையில் பலரை கண்ணீர் விட வைக்கிறாரே.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.